சத்தியமங்கலம்,பிப்.28: சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை ஆலய வளாகத்தில் ஆயிரக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சிவராத்திரியை பண்டிகை முன்னிட்டு கோவில் வளாகத்தில் குவிந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்களுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மேலும் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் மேளதாளம் முழங்க பக்தி பாடல்கள் பாடியபடி இரவு முழுவதும் கண்விழித்து பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர். மேலும் சிவலிங்கங்களுக்கு திருமஞ்சனம்,பால்,பன்னீர்,இளநீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேக பூஜைகளும் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று காலை சிறப்பு பூஜைகளுடன் சிவராத்திரி விழா நிறைவு பெற்றது.
The post மகா சிவராத்திரியை முன்னிட்டு தனவாசி காட்டில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.
