×

நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை

சண்டிப்பூர்: ஒளியை விட வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை செலுத்தப்பட்டதாகவும் அது துல்லியமாக பாய்ந்து இலக்கை அளித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டிருந்தாலும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள பிரமோஸ் ஏவுகணை கப்பலையும் நிலப்பகுதியையும் தாக்கும் வகையில் இருவகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை தற்போது நிலப்பகுதியில் இருந்து செலுத்தப்பட்ட நிலையில் அண்மையில் கடலில் இருந்து ஏவி சோதிக்கப்பட்டிருந்தது. பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்திடமும், கடற்படையிடமும் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் இனி அதன் மேம்பட்ட வடிவம் சேர்க்கப்பட உள்ளது….

The post நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை appeared first on Dinakaran.

Tags : India ,Chandipur ,Odisha ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம்!!