- பஞ்ச்பூர் பேருந்து நிலையம்
- திருச்சி
- அமைச்சர்
- கே. என் நேரு
- திருச்சி பஞ்ச்பூர் பேருந்து நிலையம்
- தின மலர்
திருச்சி: ₹492 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மார்ச் இறுதியில் திறக்கப்பட உள்ளது. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் ரூ.492.55 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இது திறப்பதற்கான நாள் இதுவரை இரண்டு முறை தள்ளி சென்று விட்டது. எனவே இந்த முறை நடந்த இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வருகின்ற மார்ச் 31ம் தேதி பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் 15ம் தேதிக்குள் முடிப்பதற்கு அறிவுறுத்தியுள்ளோம். மேலும் பேருந்து நிலையம் மார்ச் மாத இறுதியில் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த பேருந்து நிலையத்திலிருந்து எல்லா பேருந்துகளும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக போக்குவரத்து துறையின் மேலாளரை நேரில் வரவழைத்து பேருந்துகளை உருவாக்கும் குறித்து கலந்து ஆலோசித்து இருக்கிறோம். எனவே பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து எல்லா பேருந்துகளும் புறப்பட்டு மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து புறப்பட்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களுக்கு குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கக்கூடிய கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்ட பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். மேலும் ஆம்னி பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவு பெறும் வரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்காக திட்டமிடப்பட்டு வருகிறது. எனவே சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் இரண்டும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ரூ.492.55 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மார்ச் இறுதியில் திறப்பு appeared first on Dinakaran.
