×

செய்யாறு அருகே காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் ₹50 கோடியில் 4 வழி சாலைக்கு எம்எல்ஏ பூமி பூஜை

செய்யாறு, பிப். 27: நெடுஞ்சாலைத்துறை சார்பில் காஞ்சிபுரம் -வந்தவாசி சாலையில் முதல் கட்டமாக 6 கிலோ மீட்டர் தூரம் மாங்கால் கிராமத்திலிருந்து உக்கல் கிராமம் வரை ₹50 கோடி மதிப்பீட்டில் இரு வழி பாதையுடன் கூடிய தார் புருவங்களை நான்கு வழி பாதையாக அகலப்படுத்தி மேம்பாட்டு செய்தல் மற்றும் உயர்மட்ட பாலம் கட்டுதல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று மாங்காலில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அனக்காவூர் கிழக்கு திராவிட முருகன், வெம்பாக்கம் மத்தியம் ஜெ.சி.கே.சீனிவாசன், செய்யாறு கிழக்கு ஆ.ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post செய்யாறு அருகே காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் ₹50 கோடியில் 4 வழி சாலைக்கு எம்எல்ஏ பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram-Vandavasi road ,Cheyyar ,Highways Department ,Mangal ,Ukal ,MLA ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி