×

கள்ளழகர் கோயிலில் இலவச திருமணம்

மதுரை, பிப். 27: அழகர்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரண்டு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடைபெற்றது. தம்பதியர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கட்டில், பீரோ, மெத்தை, பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட சீர் வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது. மணமக்களை கோயில் அதிகாரிகள், உறவினர்கள் வாழ்த்தினர். இந்த விழாவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, ரவிக்குமார், கோயில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, பேஷ்கார் முருகன், உதவி பேஷ்கார் ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கள்ளழகர் கோயிலில் இலவச திருமணம் appeared first on Dinakaran.

Tags : Kallazhagar Temple ,Madurai ,Alaghar Temple ,Hindu Religious Endowments Department ,
× RELATED ஓய்வூதியர் தின விழா