- கோட்சே
- தே.தொ.கவும்
- காங்கிரஸ்
- கம்யூனிஸ்டுகள்
- கோழிக்கோடு
- தேசிய தொழில்நுட்பக் கல்லூரி
- கோழிக்கோடு, கேரளா
- ஷைஜா
- இயந்திரவியல் துறை
- காந்தி
- முகநூல்
- இந்தியா
- டீன்

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேசிய தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இதில், இயந்திரவியல் பொறியியல் துறை பேராசிரியராக ஷைஜா பணியாற்றினார். கடந்த ஆண்டு நடந்த காந்தியின் நினைவு நாளில் ஷைஜா தனது பேஸ்புக் பதிவில், இந்தியாவை காப்பாற்றியதற்காக கோட்சேவை பற்றி பெருமைப்படுகிறேன். இந்தியாவில் பலரின் நாயகன் நாதுராம் கோட்சே என்று குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையானதையடுத்து ஷைஜா அந்தக் பதிவை நீக்கினார். ஆனால் அந்த ஸ்கிரீன் ஷாட்கள் வைரலானது. புகார்களின் பேரில், கோழிக்கோடு நகர போலீசார் ஷைஜா மீது ஐ.பி.சி பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தூண்டுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
குன்னமங்கலம் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனால், அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில்,ஷைஜாவை கோழிக்கோடு என்ஐடியில் டீனாக(திட்டமிடல்,மேம்பாடு பிரிவு) ஒன்றிய அரசு நியமித்துள்ளது. ஷைஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு காங்கிரஸ், மார்க்சிட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
The post கோட்சேவை புகழ்ந்து கருத்து பதிவிட்ட பேராசிரியைக்கு என்ஐடியில் டீன் பதவி: காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.
