×

தமிழகத்தில் 1,076 கி.மீ கடற்கரை பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக மாறுவதை தடுக்க திட்டம்: அரசிடம் நீர்வள ஆதார மையம் அறிக்கை தாக்கல்

சென்னை: தமிழகத்தில் 1,076 கி.மீ கடற்கரை பகுதிகளில் கடல்நீர் நிலத்தடி நீர், உப்பு தண்ணீராக மாறுவதை தடுக்க புது திட்டம் ஒன்றை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, நாகை, தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உட்பட 12 மாவட்டங்களில் 1,076 கிமீ  கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதன் காரணமாக அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு தன்மையாக மாறி வருவதாக நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் 34 இடங்களில் நிலத்தடி நீர் உப்பு தன்மையாக மாறி விட்டது. இதனால், அந்த பகுதிகளில் நிலத்தடி நீரை  பாசன தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீர் குடிநீருக்கு அருந்தவே தகுதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நீரை குடிப்பதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.எனவே, கடல் நீர் நிலத்தடி நீரில் உட்புகுவதை தடுக்க  நிலத்தடி நீர்வள ஆதார விவர  குறிப்பு மையம் சார்பில் கடலோர மாவட்ட பகுதிகளில் கண்காணித்து சிறப்பு ஆய்வு மேற்கொண்டன. அப்போது, எந்தெந்த பகுதிகளில் தடுப்பணை அமைப்பது, நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைப்பது என்பது குறித்தும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் உப்பு தன்மை அதிகமாக உள்ள பகுதிகளில் தடுப்பணை அமைவதன் மூலம், உப்பு நீர் உட்புகுவது முற்றிலும் தடுக்கப்படும். இதன் மூலம் கடலோர பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீரின் தன்மை மாறும். தற்போது, நிலத்தடி நீர் உப்பாக மாறியதால் செயலிழந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளின் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், நல்ல நிலைக்கு மாறும்….

The post தமிழகத்தில் 1,076 கி.மீ கடற்கரை பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக மாறுவதை தடுக்க திட்டம்: அரசிடம் நீர்வள ஆதார மையம் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Water Resources Resource Center ,Govt ,Chennai ,Water Resource Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...