×

இலவச வீட்டுமனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம்

 

திண்டுக்கல், பிப். 26: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மாதர் சங்கம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாதர் சங்க மாநில செயலாளர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாப்பாத்தி, மாநகர தலைவர் நிறைமதி, மாநகர செயலாளர் ஷோபா முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு அசோக் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச பட்டா வீட்டுமனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை மனுவினை கலெக்டர் சரவணனிடம் அளித்து விட்டு சென்றனர்.

The post இலவச வீட்டுமனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Collector ,Mathar Sangam ,State Secretary ,Rani ,District Secretary ,Papathi ,Municipal Chairman ,Moolamati ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை