×

சீக்கியருக்கு எதிரான கலவரம் காங். மாஜி எம்.பி.க்கு ஆயுள் சிறை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984ல் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதைதொடர்ந்து டெல்லியில் நடந்த கலவரத்தில், 2,100 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது சரஸ்வதி விஹார் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அவருக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அப்போது, சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

The post சீக்கியருக்கு எதிரான கலவரம் காங். மாஜி எம்.பி.க்கு ஆயுள் சிறை appeared first on Dinakaran.

Tags : Anti-Sikh riots ,Congress ,New Delhi ,Former ,Indira Gandhi ,Sikhs ,Delhi ,Saraswati Vihar ,anti- ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது