×

தக்கலையில் தடையை மீறி பாஜ ஆர்ப்பாட்டம் 70 பேர் மீது வழக்கு

தக்கலை, பிப்.26 : பத்மநாபபுரம் நகர பா.ஜ சார்பில் பாஜ நகர்மன்ற உறுப்பினரின் கடையினுள் நுழைந்து தாக்குதல் நடத்திய தக்கலை காவல் நிலைய எஸ்எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்து கல்குளம் தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர பாஜ தலைவர் கீதா தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சுரேஷ் ஆகியோர் பேசினர். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பத்மநாபபுரம் நகர பாஜகவை சேர்ந்த கிளைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் அனுமதியை மீறி போராட்டம் நடத்தியதால் நகர தலைவர் கீதா உள்ளிட்ட 70 பேர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

The post தக்கலையில் தடையை மீறி பாஜ ஆர்ப்பாட்டம் 70 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Thakkalai ,Kalkulam Tahsildar ,Padmanabhapuram Nagar BJP ,Thakkalai police station ,SSI ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை