- நியூசிலாந்து
- ரவீந்திரன்
- ராவல்பிண்டி
- ரசின் ரவீந்திர
- வங்காளம்
- ICC சாம்பியன்ஸ் கோப்ப
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி...
- நியூசிலாந்து
- தின மலர்
ராவல்பிண்டி: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 112 ரன் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர் ஆடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ஐசிசி உலக கோப்பை போட்டியின்போதும் முதல் போட்டியில் ரவீந்திரா சதம் விளாசி இருந்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை, ஐசிசி உலகக் கோப்பை ஆகிய இரண்டிலும் முதல் போட்டியிலேயே சதம் விளாசிய முதல் வீரர் என்ற அரிய சாதனையை ரவீந்திரா அரங்கேற்றி உள்ளார். தவிர, ஐசிசி ஒரு நாள் தொடர்களில் அதிகபட்சமாக 4 சதங்கள் விளாசிய நியூசிலாந்து வீரராக ரவீந்திரா சாதனை நிகழ்த்தி உள்ளார். அந்த அணியில் உள்ள ஜாம்பவான் வீரர்களான கேன் வில்லியம்சன், நாதன் ஆஸ்லே ஆகியோர் கூட ஐசிசி ஒரு நாள் தொடர்களில் 3 சதங்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
The post நியூசி வீரர் ரவீந்திரா புதிய உலக சாதனை appeared first on Dinakaran.
