×

விராலிப்பட்டி பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி

 

கிருஷ்ணராயபுரம், பிப்.25: கிருஷ்ணராயபுரம் அடுத்த வரவணை ஊராட்சி விராலிபட்டி பிரிவு சாலை பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்றது.
கரூர் கோட்டம், கிரு ஷ்ணராயபுரம் உட்கோட்டம், கிருஷ்ணராயபுரம் பிரிவு, வரவணை ஊராட்சி, விராலிபட்டி பிரிவு சாலை அருகில் வளைவு பகுதியில் கி.மீ. 32/2 ல் வேகத்தடை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கரூர், கோட்டப்பொறியாளர் ரவிக்குமார் உத்தரவின்படி, கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் உதவிக்கோட்டப் பொறியாளர் கர்ணன் மற்றும் உதவிப்பொறியாளர் அசாருதீன் ஆகியோரின் அறிவுரையின்படியும் கிருஷ்ணராயபுரம் பிரிவு உதவியாளர் கண்ணதாசன் சாலைப்பணியாளர்களைக் கொண்டு வேகத்தடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

The post விராலிப்பட்டி பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Viralipatti ,Krishnarayapuram ,Highways Department ,Karur ,Krishnarayapuram division ,ward of ward ,Viralipatti division ,Dinakaran ,
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...