- மாசி களரி விழா
- முதுகுளத்தூர்
- சாயல்குடி
- பூங்குளத்து
- அய்யனார்
- கருப்பணசாமி
- சேது மாகாளியம்மன்
- சுடலை மாடசாமி
- ஏனாதி பூங்குளம் கிராமம்
- பூங்குளத்து அய்யனார்
சாயல்குடி,பிப்.25: முதுகுளத்தூர் அருகே ஏனாதி பூங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பூங்குளத்து அய்யனார், கருப்பணசாமி, சேது மாகாளியம்மன், சுடலை மாடசாமி கோயில் உள்ளது. இங்கு மாசி களரி விழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனை முன்னிட்டு பூங்குளத்து அய்யனார், கருப்பணசாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
பின்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
பிப்ரவரி 26ம் தேதி பச்சிலை பரப்பி இறைவனை வேண்டுதல், பிப்.28ம் தேதி ஏனாதி கிராமத்தில் இருந்து பூஜை பெட்டி தூக்கி பூங்குளம் கோயிலுக்கு ஊர்வலமாக வருதல், அதனை தொடர்ந்து பூக்குழி இறங்குதல், மயான வேட்டை மற்றும் குறி சொல்லுதல், சாமியாட்டம் ,பெண்கள் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
மார்ச் 1ம் தேதி பொங்கல் வைத்து, கிடா வெட்டுதல் மீண்டும் பூங்குளத்தில் இருந்து ஏனாதி கிராமத்திற்கு பூஜை பெட்டி தூக்கி செல்லுதல், பிறகு சாமி ஊர்வலத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய உள்ளனர். ஏற்பாடுகளை ஏனாதி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
The post முதுகுளத்தூர் அருகே மாசி களரி விழா துவக்கம் appeared first on Dinakaran.
