×

களக்காடு அருகே கார் கண்ணாடி உடைப்பு ஜாமீனில் விடுதலையானவருக்கு வலை

களக்காடு,பிப்.25: களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ.நகர் கீழகாலனியை சேர்ந்தவர் கணேசன் மகன் மணிகண்டன் (37). கார் டிரைவராக உள்ளார். கடந்தாண்டு ஜூலை மாதம் இவரது கார் கண்ணாடியை அதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் என்பவர் உடைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுரேஷை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டு முன் நின்று கொண்டு தனது தாயார் பிச்சம்மாளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ் அவருடன் தகராறு செய்தார். மேலும் அவரது கார் கண்ணாடியை உடைத்து, அவரையும் தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மணிகண்டன் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சக்திநடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷை தேடி வருகிறார்.

The post களக்காடு அருகே கார் கண்ணாடி உடைப்பு ஜாமீனில் விடுதலையானவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kalakkadu ,Manikandan ,Ganesan ,J.J. Nagar Keezh Colony ,Suresh ,Chellathurai ,Kalakkadu… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை