- மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு நிறுவனம்
- சட்டமன்ற உறுப்பினர்
- பாபு
- மதுராந்தகம்
- சாயூர்
- பனையூர் பாபு
- பஞ்சாயத்து கவுன்சில்
- துணை ஜனாதிபதி
- ஏஏஏஅகத்தியன்
- தின மலர்
மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில், ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்து கொண்டு வழங்கினார். மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.ஆ.அகத்தியன், இளைய தளபதி பி.தேவதர்ஷன் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் தொண்டு இயக்கத் தலைவர் கோ.ப.அன்பழகன் தலைமை தாங்கினார். லட்சுமி பங்காரு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் ஆஷா அன்பழகன், மருத்துவர்கள் மதுமலர் பிரசன்ன வெங்கடேஷ், ஷாலினி அகத்தியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.ஆ.அகத்தியன் அனைவரையும் வரவேற்றார்.
இதில், சிறப்பு விருந்தினர்களாக செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, முன்னாள் எம்பி துரை, ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் ஏழுமலை, கண்ணன், சாந்தி ராமச்சந்திரன், பாஜ மாவட்ட தலைவர் பிரவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
திமுக ஒன்றிய செயலாளர் சிற்றரசு, மாவட்ட கவுன்சிலர் குணா, திமுக ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் சுஜாதா பாரதிபாபு, சிவாச்சாரியார் சங்கர் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொண்டு இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
The post மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ பாபு வழங்கினார் appeared first on Dinakaran.
