×

நாளை மனு நீதி நாள் முகாம்

செங்கல்பட்டு: சூனாம்பேடு கிராமத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாளை மனு நீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.  செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில், பிப்ரவரி 2025 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் செய்யூர் வட்டத்தில் சூனாம்பேடு குறுவட்டம், நெ.49, சூனாம்பேடு கிராமத்தில் நாளை (26ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.  இம்முகாமில், அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

The post நாளை மனு நீதி நாள் முகாம் appeared first on Dinakaran.

Tags : Petition Justice Day Camp ,Chengalpattu ,Sunambedu ,Collector ,Arunraj ,District ,Dinakaran ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...