×

அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நாளை பேச்சுவார்த்தை!

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி ஆகியோர் இக்குழுவில் உள்ளனர்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

 

The post அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நாளை பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,MLA ,Tamil Nadu ,K. Stalin ,Velu ,Thangam Tennarasu ,Anbil Mahes Poyyamozhi ,Kayalvizhi ,Committee of Ministers ,Chief Secretariat ,of Civil Servants Associations ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...