- குமுளி மலைப்பாதை
- கூடலூர்
- லோயர் கேம்ப்
- Kumuli
- கம்பம் மேற்கு
- காட்டில்
- அதிகாரி
- ஸ்டாலின்
- என்.எஸ்.எஸ்
- மாவட்டம்
- தொடர்பு அதிகாரி
- நேருராஜன்
- தின மலர்
கூடலூர், பிப். 23: லோயர் கேம்ப் முதல் குமுளி வரை உள்ள வனப் பகுதியில் நெகிழிப்பைகளை அகற்றுதல் மற்றும் வனப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை கம்பம் மேற்குவனச்சரகர் ஸ்டாலின் ,என் எஸ் எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் நேருராஜன் ஆகிய முன்னிலையில் வனஆர்வலர் சதீஷ்குமார் பங்களிப்போடும் பாரஸ்டர் ரகுபதி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு வனத்துறையும், அகில இந்திய வன மேம்பாட்டு இயக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் 30 பேரும் இணைந்து கேரளா எல்லையான குமுளியில் இருந்து லோயர் கேம்ப் வரை உள்ள சுரங்கனார் காப்புக்காட்டு பகுதியில் சாலையின் இருபுறமும் வழிப்போக்கர்களும் ஐயப்ப பக்தர்களும் தூக்கி வீசி சென்ற நெகிழி, பாலித்தீன் குப்பைகளை சேகரித்து கூடலூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் வாகனத்தின் மூலம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஒத்துழைப்போடு அகற்றினர். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய வன மேம்பாட்டு இயக்கத்தினரும், பள்ளி ஆசிரியர்களும், வனத்துறையினரும் கலந்து கொண்டனர்.
The post குமுளி மலைச்சாலையில் வனப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.
