×

ஓராண்டு பணி மனநிறைவை தந்தது எதிர்ப்புகளால் ஊக்கம் பெறுகிறேன்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின், புதிதாக கட்டமைக்கப்பட்ட சர்க்கிள், வட்ட நிர்வாகிகள் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையிடம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அதை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்று, 2வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஓராண்டு எனக்கு மனநிறைவை தந்தது. டெல்லி சென்று எனக்கு எதிராக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் புகார் அளித்திருப்பது பற்றி நான் எதுவும் நினைக்கவில்லை. இது ஜனநாயக கட்சி. என்னை பொறுத்தவரை இந்த எதிர்ப்புகளால் மேலும் ஊக்கம் பெறுகிறேன். இன்னும் தீவிரமாக கட்சி பணியை ஆற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாநில தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, எம்பிக்கள் ராபர்ட் புரூஸ் எம்.பி., முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், நாசே ராமசந்திரன், கே.விஜயன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தாம்பரம் நாராயணன், பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கரன், இல.பாஸ்கரன், என்.ரங்கபாஷ்யம், எஸ்‌.ஏ.வாசு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.லெனின் பிரசாத், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், பொதுக்குழு உறுப்பினர் பாக்கியராஜ், எஸ்.எம்.குமார், கவுன்சிலர் சுகன்யா செல்வம், மன்சூர் அலிகான், கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன், எஸ்.சி.துறை மாவட்ட செயலாளர் மா.வே.மலையராஜா, அகரம் கோபி, தங்க வீரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post ஓராண்டு பணி மனநிறைவை தந்தது எதிர்ப்புகளால் ஊக்கம் பெறுகிறேன்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Selva Perundakai ,Chennai ,South Chennai Central District Congress Party ,Tamil Nadu Congress ,President ,Sathyamoorthy Bhavan ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு...