×

அம்பையில் மரத்திலிருந்து விழுந்த விவசாயி சாவு

அம்பை,பிப்.22: அம்பையில் மரத்தில் இருந்து விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அம்பை கோவில்குளம் மேல காலனியை சேர்ந்தவர் அருணாசலம் மகன் முருகேசன் (69). விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பிப்.10ம் தேதி தனது மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது அவர் தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரம் அருகில் உள்ள வேப்பமரத்தில் ஏறியுள்ளார். வேப்பமரத்தின் கிளை ஒடிந்து விழுந்ததில் முருகேசன் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகேசன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அம்பையில் மரத்திலிருந்து விழுந்த விவசாயி சாவு appeared first on Dinakaran.

Tags : Ambai ,Murugesan ,Arunachalam ,Kovilkulam Mela Colony ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை