×

கன்னியாகுமரியில் 23 புதிய டி.எஸ்.பிகளுக்கு பயிற்சி

கன்னியாகுமரி, பிப்.22: மேகாலயா மாநிலத்தில் உள்ள வடகிழக்கு போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 23 புதிய டி.எஸ்.பிக்கள் பணியில் சேர உள்ளனர். அவர்களுக்கு எஸ்.பி. ஸ்டாலின் அறிவுரையின் பேரில் 2 நாட்கள் பயிற்சி வகுப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. கன்னியாகுமரி டி.எஸ்.பி.மகேஷ்குமார் தலைமை வகித்து 23 புதிய டி.எஸ்.பிக்களுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியில் டி.எஸ்.பி. பணி, செயல்படும் முறை, அணுகுமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் புதிய டி.எஸ்.பிக்கள் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

The post கன்னியாகுமரியில் 23 புதிய டி.எஸ்.பிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,North-East Police Training School ,Meghalaya ,S.P. Stalin ,Mahesh Kumar… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை