- காட்டிமேடு அரசு பள்ளி
- திருத்துறைப்பூண்டி
- கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி
- திருவாரூர்
- எம்.எஸ். பாலு
- தின மலர்
திருத்துறைப்பூண்டி, பிப்.21: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச.பாலு வரவேற்று கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவி தேன்மொழி தலைமை வகித்தார். இதில் பள்ளியை தூய்மைப்படுத்துதல், பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருதல், பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டுதல், பள்ளியில் கல்வி புரவலர்களை அதிகமாக சேர்த்தல், பள்ளி வளாகத்திற்கு வெளியே மாணவர்களை பாதிக்கும் போதைப் பொருட்கள் விற்பனையை தடை செய்யத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் நிறைவாக ஆசிரியர் பிரதிநிதிதனுஜா நன்றி கூறினார்.
The post கட்டிமேடு அரசுப் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் மேலாண்மைக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
