×

டெல்லி முதல்வருக்கு ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி, பிப். 21: டெல்லியில் புதிதாக பதவி ஏற்றுள்ள முதல்வர் ரேகா குப்தாவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜ அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து புதுதில்லி, ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ரேகாகுப்தா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ரேகாகுப்தாவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் டெல்லியின் 4வது பெண் முதல்வராக பதவியேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வராக பதவியேற்றுள்ள தாங்கள், பாரதப் பிரதமரின் திறமையான வழிகாட்டுதலின்கீழ் தங்களது வெற்றிகரமான நிர்வாகத்தின் மூலம் டெல்லி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைப்பதற்கு எனது சார்பாகவும், புதுச்சேரி மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post டெல்லி முதல்வருக்கு ரங்கசாமி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Rangaswamy ,Delhi ,Chief Minister ,Puducherry ,Chief Minister of Delhi ,Rekha Gupta ,BJP ,Delhi Assembly elections ,Ramlila Maidan, New Delhi ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை