×

திண்டுக்கல்லில் வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல், பிப். 21: திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநகர் செயலாளர் அரபு முகமது, சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட பொருளாளர் தவக்குமார், மாநகர் குழு உறுப்பினர்கள் கார்த்திக், அஜித், லதா, மாநகராட்சி குழு தலைவர் ஜோதிபாசு, கவுன்சிலர் கணேசன், முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 34, 35, 44, 45 ஆகிய வார்டுகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் கிளை செயலாளர்கள் மோகன்ராஜ், கிருஷ்ணன், சிறுமணி, எட்வர்ட், சுரேஷ் குமார், சுவான், தங்கவேல், உஷாராணி, கித்தேரி மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்

The post திண்டுக்கல்லில் வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Marxist Communist Party ,Dindigul East Taluka Office ,District Secretary ,Prabhakaran ,Mayor Secretary ,Arab Mohammed ,CITU ,Jayaseelan ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை