×

தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, பிப்.21: தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் வெற்றிவேல், எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து பேசினார். இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை, தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உருவ சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,District ,AIADMK Executives ,Dharmapuri District AIADMK Executives Consultative Meeting ,Council ,President ,Nagarajan ,City Secretary ,Pookadai Ravi ,State Agriculture Unit ,D.R. Anbazhagan ,J.Peravai… ,Dharmapuri District ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை