×

காவல்நிலையம் முன் தீக்குளிக்க முயற்சி பெண்ணை தூண்டி விட்ட வாலிபர் கைது

தர்மபுரி, பிப்.21:தர்மபுரி மாவட்டம், ஏரியூரைச் சேர்ந்தவர் ஜெயவேல் மனைவி மாரியம்மாள்(55). இவர்களுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக நேற்று முன்தினம், ஏரியூர் காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகார் கொடுக்க சென்றுள்ளார். அவருடன் அண்ணா நகரைச் சேர்ந்த விஜய்(34) என்பவரும் சென்றார். அப்போது, புகார் அளித்தால் போலீசார் கண்டுகொள்ள மாட்டார்கள். தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் என விஜய் கூறியுள்ளார். அதன் பேரில், காவல்நிலையம் முன்பு, உடலில் டீசல் ஊற்றிக் கொண்டு மாரியம்மாள் தீக்குளிக்க முயன்றார். அதனை கண்ட போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், கண் எரிச்சலால் துடித்த மாரியம்மாளை பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, தீக்குளிக்க தூண்டிய விஜயை கைது செய்தனர்.

The post காவல்நிலையம் முன் தீக்குளிக்க முயற்சி பெண்ணை தூண்டி விட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Jayavel ,Mariammal ,Eriyur ,Dharmapuri district ,police station ,Vijay ,Anna ,Nagar ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...