×

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவையில் வரும் 25ம் தேதி மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவரது வருகைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட டிவிட்டர் பதிவு: அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியும் மற்றும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக கோவையில் சிவராத்திரி விழாவில் பங்கேற்க பிப்ரவரி 25ம்தேதி வருகை தரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

The post தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Tamil Nadu ,Selvapperunthakai ,Chennai ,Home Minister ,Coimbatore ,Congress party ,Congress ,Twitter ,Ambedkar… ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்