×

காவல்துறை தொலைதொடர்பு பிரிவு பேட்டரிகள் ரூ.4.61 லட்சத்திற்கு ஏலம்

நாகர்கோவில், பிப். 21: குமரி மாவட்ட காவல் தொலைத்தொடர்பு பிரிவில் கழிவு செய்யப்பட்ட 191 பேட்டரிகள் உள்பட 1205 பொருட்களின் பொது ஏலம் நேற்று நாகர்கோவில் கோட்டார் தொலைத்தொடர்பு பிரிவு அலுவலகத்தில் நடந்தது.இந்த ஏலம் ஏடிஎஸ்பி(தொழில்நுட்பம்) ரமேஷ் தலைமையில் மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அதிகாரி புனித மல்லிகா, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல் பண்டக பிரிவு கண்காணிப்பாளர் ஜெபஷீலி ஆகியோர் அடங்கிய குழுவால் நடத்தப்பட்டது. ஏலத்தில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்தன. மொத்தம் ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 350க்கு ஏலம் போனது.

The post காவல்துறை தொலைதொடர்பு பிரிவு பேட்டரிகள் ரூ.4.61 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari District Police Telecom Unit ,Kottar Telecom Unit ,ADSP ,Ramesh ,District Police… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை