இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் அமைதியின்மை நிலவி வந்தது. சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருந்த நிலையில் அரசியல் நிலையற்ற சூழல் காரணமாக முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கடந்த 13ம் தேதி அங்கு குடியரசு தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் அஜய் குமார் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மணிப்பூர் மக்கள் சமூகத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிக்க முன்வர வேண்டும். அனைத்து சமூக மக்களும், குறிப்பாக இளைஞர்கள் தாமாக முன்வந்து கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அடுத்த ஏழு நாட்களுக்குள் அருகில் உள்ள காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.குள் ஆயுதங்களை ஒப்படைத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதியளிக்கிறேன்.
அதன் பின்னர் ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம்: மணிப்பூரில் முன்னாள் அமைச்சர் யும்னம் கெம்சந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர், ” பாஜ மாநில தலைவர் தான் எங்களது தலைவர். விரைவில் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதில் புதிய அரசை அமைப்பது தொடர்பான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படும் ” என்றார்.
The post சட்டவிரோத ஆயுதங்களை 7 நாட்களில் ஒப்படைக்க வேண்டும்: மணிப்பூர் ஆளுநர் கெடு appeared first on Dinakaran.
