×

அரவக்குறிச்சி அருகே இரு தரப்பினரிடையே தகராறு: 2 பேருக்கு சிறை

 

அரவக்குறிச்சி, பிப். 20: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (46). பெயிண்டிங் காண்டிராக்டர். இவரிடம் பணி புரியும் சக்திவேல் என்பவர் 10,000 ரூபாயை கடனாக பெற்றுள்ளார். கடன் தொகையை மூன்று மாத தவணை மட்டும் கொடுத்து விட்டு கடந்த இரண்டு மாதங்களாக தவணைத் தொகையை கட்டாமல் இருந்து வந்துள்ளார். இதனால் புஷ்பராஜ் தவணை தொகையை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் புஷ்பராஜ் மற்றும் அவரது நண்பர் தியாகராஜ் ஆகியோர் சீத்தப்பட்டி காலனி அருகே பேசிக் கொண்டிருந்த போது, சம்பவ இடத்திற்கு வந்த சக்திவேல் அவரது மகன் சுதாகர் மற்றும் அவரது நண்பர்கள் ராகுல் மற்றும் பாலச்சந்திரன் ஆகியோர் புஷ்பராஜ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த புஷ்பராஜ் மற்றும் எதிர் தரப்பினர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சக்திவேல் மற்றும் அவரது மகன் சுதாகரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கரூர் சிறையில் அடைத்தனர்.

The post அரவக்குறிச்சி அருகே இரு தரப்பினரிடையே தகராறு: 2 பேருக்கு சிறை appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,PUSHBARAJ ,SITHAPATTI COLONY ,ARAWAKURICHI, KARUR DISTRICT ,Shaktivel ,
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...