×

தென்சென்னை தொகுதியில் ரூ.1.60 கோடியில் திட்ட பணிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை: விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி, 128வது வார்டில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்ச்சி கூடம், பல்நோக்கு கட்டிடம், 138வது வார்டுக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில், ரூ.43.58 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், அதேபோல் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 128வது வார்டு காமராஜர் சாலையில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை, 138வது வார்டு எம்.ஜி.ஆர் நகரில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் வளர்ச்சி மையம் என மொத்தம் ரூ.1,60,58,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் – பெருநகர சென்னை மாநகராட்சி கணக்கு குழுத் தலைவர் கே.கே.நகர் தனசேகரன், பகுதிச் செயலாளர்கள் – மாமன்ற உறுப்பினர்கள் ராசா, கண்ணன், மண்டலக் குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ரத்னா லோகேஷ்வரன், லோகு, நிலவரசி துரைராஜ், மாவட்ட துனை செயலாளர் வாசுகி பாண்டியன், வட்டச் செயலாளர்கள் கோவிந்தராஜன், ராஜா, ஜம்பு முருகன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post தென்சென்னை தொகுதியில் ரூ.1.60 கோடியில் திட்ட பணிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,South Chennai ,Chennai ,Virugambakkam ,Tamilachi Thangapandian ,Annai Sathya Nagar ,Dinakaran ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்