×

வியாபாரியின் டூவீலர் திருடிய 3 பேர் கைது

மதுரை, பிப். 20: ஜவுளி வியாபாரியின் டூவீலரை திருடிய வழக்கில், சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை, மகால் 3வது தெருவை சேர்ந்தவர் டிக்காராம்(40). இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்தி விட்டு தூங்கச்சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, அவரது டூவீலர் மாயமாகி இருந்தது. இதுகுறித்து தெற்குவாசல் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மதுரை, தெற்குமாசி வீதியை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சிவனேசன்(19), தெற்குவாசலை சேர்ந்த முருகன் மகன் பிரவீன்குமார்(19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அவரது டூவீலரை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post வியாபாரியின் டூவீலர் திருடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai, Pip ,Tikharam ,Madurai, Mahal 3rd Street ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை