×

குமரி மாவட்ட யோகாசன போட்டி நாராயண குரு பள்ளி சாதனை

நாகர்கோவில், பிப்.20: கன்னியாகுமரி மாவட்ட ஆத்ம ஜோதி யோகா சென்டர் மாவட்ட அளவில் நடத்திய ஓபன் யோகாசன ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025ல் நாகர்கோவில் கோட்டாறு நாராயண குரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளனர். இப்பள்ளியின் 6ம் வகுப்பு மாணவன் அனுஷத், 7ம் வகுப்பு மாணவன் தனுஜ் வேதன் ஆகியோர் முதல் பரிசும், 7ம் வகுப்பு மாணவர்கள் அவினாஷ் கார்த்திக், வினய் லெக்ஷ்மண், ஜெஸ்வந்த் ராம், கோவர்த்தன் ஆகியோர் 2ம் பரிசும், 7ம் வகுப்பு மாணவன் சூர்யா, 3ம் வகுப்பு மாணவன் ஆரூரன், 4ம் வகுப்பு மாணவர்கள் ஹரிவிஷ்வா, ரிஷிகேஷ் சாய் ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் நாகராஜன், செயலாளர் சுப்பிரமணியம், ஆலோசகர் சுப்பிரமணியம், முதல்வர் அமுதா ஜெயந்த், துணை முதல்வர் அவ்வை சிதம்பரம், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர் பாராட்டினர்.

The post குமரி மாவட்ட யோகாசன போட்டி நாராயண குரு பள்ளி சாதனை appeared first on Dinakaran.

Tags : Kumari District Yogasana Competition ,Guru School Achievement ,Nagercoil ,Kottar ,Guru Matriculation Higher Secondary School ,Open Yogasana Sports Championship 2025 ,Kanyakumari District Atma Jyoti Yoga Center ,Kumari District Yogasana Competition Narayana Guru School Achievement ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை