×

வழிபாட்டுத்தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

கருங்கல்,பிப்.20: வழிபாட்டுத்தலங்களில் வைக்கப்பட்டுள்ள அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகளை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் செங்கொடி கட்சி சார்பில் கிள்ளியூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கருங்கலில் பல்வேறு இடங்களில் உள்ள வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லாமல் அதிக ஒலி எழுப்பக் கூடிய வகையில் ஒலி பெருக்கிகள் வைத்திருப்பதாகவும், இது சம்மந்தமாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் செங்கொடி கட்சி சார்பில் கிள்ளியூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டவர்கள் ஒலி மாசு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோஷங்கள் எழுப்பினர்.

The post வழிபாட்டுத்தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Karungal ,Killiyur ,taluka ,Marxist Leninist Red Flag Party ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை