×

தண்டலம் கிராமத்தில் கோயில் காணிக்கை திருட்டு: உண்டியலை வயலில் வீசிச்சென்றனர்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, தண்டலம் கிராமத்தில் கிராம தேவதையான பொன்னி அம்மன் கோயில் உள்ளது. நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் அர்ச்சகர் கோயிலில் பூஜை செய்ய வந்தபோது, கோயில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, தர்மகர்த்தா செல்வத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தர்மகர்த்தா கோயில் உள்ளே சென்று பார்த்த போது, மூலவர் முன்பு இருந்த உண்டியல் காணாமல் போனதை உறுதி செய்தார். இதுகுறித்து, பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், எஸ்.ஐ. விக்னேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர்கள் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துவிட்டு கோயில் அருகே உள்ள வயல் வெளியில் உண்டியலை வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. அந்த உண்டியலை பறிமுதல் செய்த போலீசார்,விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள சிவன் கோயில் கேட்டின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அங்கு கோயில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

The post தண்டலம் கிராமத்தில் கோயில் காணிக்கை திருட்டு: உண்டியலை வயலில் வீசிச்சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Thandalam village ,Uthukkottai ,Ponni ,Amman ,Thandalam ,Periypalayam ,Dharmakartha ,Selvam ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...