×

பழநியில் தீ தடுப்பு பயிற்சி

பழநி, பிப். 20: கோடை காலம் துவங்க உள்ள நிலையில் இம்முறை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் அதிகளவு தீவிபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

குடிசை பகுதிகள் அதிகமாக உள்ள பகுதிகளில் வாரம் இரண்டு முறை இம்முகாமினை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பழநியில் குடிசை பகுதி அதிகமுள்ள மதினா நகரில் தீயணைப்பு துறையினரின் சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. தீ ஏற்படும் வழிமுறைகள், தீ விபத்தின் வகைகள், சமையல் செய்யும் போது எவ்வாறு தீ விபத்தினை தடுப்பது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும், தீ விபத்து ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கும் முறைகள் குறித்தும் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

The post பழநியில் தீ தடுப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Palani ,Fire and Rescue Services Department ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை