×

திருப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்: வெளிமாநிலத்தவரை கண்காணிக்க நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூரில் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், 3 பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. தமிழ்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகாத நாட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும், தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு பெண் மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

திருப்பூரில் இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வெளி மாநிலத்தவர் அதிகம் பணி செய்யும் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் நிலையில், வெளி மாநிலத்தவரை கண்காணிக்கவும், சுற்றுக்காவலை வலுப்படுத்தவும் காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொடுமை நடந்திருக்காது. எனவே, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடுவதை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post திருப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்: வெளிமாநிலத்தவரை கண்காணிக்க நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruppur sexual assault incident ,Anbumani ,Chennai ,PMK ,Tiruppur ,Dinakaran ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...