×

குளித்தலை பேராள குந்தாளம்மன் கோயில் திருவிழா முக்கிய வீதிகளில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

 

குளித்தலை, பிப்.19: குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் அமைந்துள்ளது பேராள குந்தாள அம்மன் பிடாரி கோயில். ஊர் காவல் தெய்வம் எல்லை பிடாரி கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பூச்செரிதல் விழா நடைபெற்றது.நேற்று காலை குளித்தலை அம்மன் குரூப்ஸ் மற்றும் இளைஞர் அணி நடத்தும் 41 ம் ஆண்டு பால்குடம் விழாவை முன்னிட்டு காவிரி கடம்பன் துறையிலிருந்து விரதம் இருந்த பக்தர்கள் மேளதாளத்துடன் முக்கிய வீதி வழியாக பால்குடம் எடுத்து வந்து கோயிலை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று. அன்னதானம் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று ( 19ம் தேதி) சுவாமி திருவிதி உலா இளநீர் பூஜை கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (20 ம் தேதி) கிராம பூஜை, 21ம் தேதி வெள்ளிக்கிழமை மாவிளக்கு பூஜை நடைபெற்று 22ம் தேதி சனிக்கிழமை வான வேடிக்கையுடன் அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சி காண ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

The post குளித்தலை பேராள குந்தாளம்மன் கோயில் திருவிழா முக்கிய வீதிகளில் பக்தர்கள் பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Kulithalai Perala Kundalamman Temple Festival Devotees ,Kulithalai ,Perala ,Kundalamman ,Pidari Temple ,Pidari Temple Festival.… ,Perala Kundalamman ,Temple Festival Devotees ,
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...