×

சாலையோரங்களில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு

 

பந்தலூர், பிப்.19: பந்தலூர் அருகே சேரங்கோடு காப்பிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் கோழி கழிவுகளை கொட்டிச் செல்வதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளான சேரங்கோடு காப்பிக்காடு, கையுன்னி வெளக்கலாடி பாலம் அருகே மற்றும் கோரஞ்சால், பழைய நெல்லியாளம், தேவாலா நீர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் கோழிக்கழிவுகளை கொட்டிச் செல்வதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாதபோது மர்ம நபர்கள் வாகனங்களில் ஏற்றி வந்து கோழிக்கழிவுகளை கொட்டிச் செல்வதால் துர்நாற்றம் ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார பாதிப்பு ஏற்படுகின்றது. வாகனங்களில் செல்பவர்கள் துர்நாற்றம் வீசுவதால் மூக்கில் கை வைத்து செல்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து சாலையோரங்களில் கோழிக்கழிவுகளை கொட்டிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையோரங்களில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Cherangodu Kappikada ,Kaiyunni ,Welakkaladi bridge ,Koranchal ,Old Nellialam ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி