×

தீக்குளித்து வாலிபர் தற்கொலை

 

புழல்: புழல் விநாயகபுரம் அருகே கல்பாளையம், சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ராஜி (26). கூலி வேலை செய்து வரும் இவருக்கு, சரியான முறையில் எங்கும் வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சல் அடைந்த ராஜி, நேற்று முன்தினம் வீட்டின் முன்னே திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீவைத்துக் கொண்டார்.

அவரது, அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, திவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜி, நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தீக்குளித்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Raji ,Kalpalayam, Sathyamurthi Street ,Bughal Vinayakapuram ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு