- திருவண்ணாமலை மாவட்டம்
- திருவண்ணாமலை
- டெக்ஸ்
- நிர்வாக இயக்குனர்
- தீபக் ஜேக்கப்
- கலெக்டர்
- தர்பகராஜ்
- தின மலர்
திருவண்ணாமலை, பிப்.19: திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலராக கோ-ஆப் டெக்ஸ் மேலாண் இயக்குனர் தீபக் ஜேக்கப் தலைமையில், திருவண்ணாமலை அரசு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தார். டிஆர்ஓ ராமபிரதிபன், செய்யாறு உதவி கலெக்டர் பல்லவி வர்மா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், வேளாண் உபகரணங்கள், உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும் ஆய்வு நடத்தினர்.
முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள், வருவாய் மற்றும் பள்ளி கல்வி துறை செயல்பாடுகள், தேர்ச்சியை அதிகரிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆய்வு செய்தார். மேலும், நகராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். திருவண்ணாமலையில் கூட்டுறவு துறை மூலம் அமைக்கப்படும் முதல்வரின் மருந்தகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நடைபெறும் கட்டுமான பணிகள், கிரிவலப் பாதையில் பணி புரியும் பெண்களுக்காக அமைக்கப்படும் தோழி தங்கும் விடுதி, கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் நடைபெறும் ஆரம்ப சுகாதார நிலையை கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் தீபக் ஜேக்கப் கள ஆய்வு நடத்தி நிலுலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
The post வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு நிலுவை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் appeared first on Dinakaran.
