×

விசாரணைக்காக வந்தபோது தப்பி ஓடிய தொழிலாளி கைது

அம்பை, பிப்.19: கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்தபோது தப்பியோடிய தொழிலாளியை போலீசார் கைதுசெய்தனர். நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பெயிண்டிங் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரை அவதூறாகப் பேசினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணைக்காக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்த இவர், திடீரென அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து அவரை தீவிரமாகத் தேடிவந்த எஸ்ஐ திருமலைக்குமார் மற்றும் போலீசார், நேற்று காலை சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.

The post விசாரணைக்காக வந்தபோது தப்பி ஓடிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : AMBAI ,KALLITAKURICHI POLICE STATION ,Raja ,Nella District, ,Kallidakurichi Fisherman Colony ,Mariammal ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்