×

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டம் ஆதாயம் தேடினால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி பெற்று தர ஆதாயம் தேடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளர்கள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கிறேன் அல்லது பெற்றுத் தருகிறேன் என்று சொல்லி தனிநபரோ, சங்கங்களோ நிறுவனங்களோ பணம் அல்லது வேறு வகையில் ஆதாயம் பெறும் நோக்கில் செயல்பட்டால் மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 9499933496 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பான புகார்கள் வரப்பெற்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன் படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் எச்சரித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டம் ஆதாயம் தேடினால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District ,Collector ,M. Pratap ,Tiruvallur District Disabled Welfare Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...