- பிரியாணி
- செங்கல்பட்டு
- சாஹித் பாஷா
- வேடப்பர் தெரு, செங்கல்பட்டு
- செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலை
- தின மலர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு வேதப்பர் தெருவை சேர்ந்தவர் சாகித் பாஷா (24). இவர் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் இரவு நேர பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் நடத்தும் பிரியாணி கடையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு கடை ஊழியர் திப்பு சுல்தான் பிரியாணி விற்பனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த காமேஷ் என்பவர் சாகித் பாஷா, திப்பு சுல்தான் ஆகிய இருவரையும் வேதப்பர் தெருவில் உள்ள தர்கா அருகே வருமாறு கூறி அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு காமேஷூடன் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆபாச வார்த்தைகளால் சாதிக் பாஷாவை திட்டிக்கொண்டு தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி எடுத்து வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதில் தடுக்க முயன்ற திப்பு சுல்தான் மற்றும் சாதிக் பாஷா ஆகிய இருவருக்கும் கை மற்றும் கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கத்தி கூச்சலிட்டனர். அப்போது அங்கிருந்து 3 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
தொடர்ந்து இருவரும் மீட்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் சாதிக் பாஷா அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாதிக் பாஷா மற்றும் திப்பு சுல்தான் ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு வேதப்பர் தெருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பிரியாணி கடை உரிமையாளர் ஊழியருக்கு அரிவாள் வெட்டு: 3 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.
