ஆலந்தூர்: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் அன்சாரி (40). கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ் (50) என்பவர், அன்சாரியிடம் உனது அக்கா மகளை எனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க உதவ முடியுமா என்று கேட்டுள்ளார். போதையில் இருந்த அன்சாரி அதெல்லாம் முடியாது என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராஜ் அன்சாரியின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார்.
அப்போது அங்கிருந்த பைக் மீது தடுமாறி விழுந்த அன்சாரிக்கு கண், மூக்கு போன்ற உடம்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுட்டு ரத்தம் வழிந்துள்ளது. இந்த சம்பவம் கேட்டு உடனே அங்கு வந்த உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அன்சாரியை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மூக்கு மற்றும் கண் புருவம் அருகே தையல் போடப்பட்டது. இதுகுறித்து அன்சாரி கொடுத்த புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜுவை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post மகனுக்கு பெண் தர மறுத்தவரின் மூக்கை உடைத்தவர் கைது appeared first on Dinakaran.
