×

பஞ்சாப் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு

சண்டிகர்: பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தில் தனியார் பேருந்து சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 26-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஃபரிக்கோட் – கோட்கபுரா சாலையில் காலை 8 மணியளவில் 36 பயணிகளுடன் தனியார் பேருந்து அமிர்தசரஸுக்குச் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரக் மீது பேருந்து மோதியுள்ளது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 10 அடி உயரப் பாலத்திலிருந்து கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 26 பயணிகள் ஃபரித்கோட்டில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் 2 பேர் அமிர்தசரஸில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் விபத்தில் ஒரு கையை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பஞ்சாப் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Punjab ,Chandigarh ,Faridkot district of Punjab ,Amritsar ,Faricot ,Kotkapura road ,Dinakaran ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...