×

சாக்‌ஷி அகர்வால் நடிக்கும் ரிங் ரிங்

சென்னை: முழுநீள நகைச்சுவை கதையுடன் உருவாக்கப் பட்டுள்ள படம், ‘ரிங் ரிங்’. திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி அலசும் இப்படத்தை சக்திவேல் எழுதி இயக்கியுள்ளார். விவேக் பிரசன்னா, சாக்‌ஷி அகர்வால், சஹானா ஷெட்டி, டேனியல் ஆன் போப் நடித்திருக்கின்றனர். வரும் ஜூலை 5ம் தேதி முதல் எம்.எஸ்.எஃப் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படத்தில், காதலர்களுக்கு இடையிலான செல்போன் பரிமாற்றத்தின் விளைவுகள் பற்றி சொல்லப்பட்டது. ‘ரிங் ரிங்’ படத்தில், திருமணமான தம்பதியிடையே செல்போன் பரிமாற்றத்தால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி சொல்லப்படுகிறது என்று படக்குழு கூறியுள்ளது.

The post சாக்‌ஷி அகர்வால் நடிக்கும் ரிங் ரிங் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sakshi Agarwal ,Chennai ,Shaktivel ,Vivek Prasanna ,Saakshi Agarwal ,Sahana Shetty ,Daniel Ann Pope ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...