×

நகை திருடிய வாலிபர் கைது

 

மதுரை, பிப். 18: மதுரையில், நண்பரின் வீட்டில் நகை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். மதுரை டிஆர்ஓ காலனியை சேர்ந்த செல்வக்குமார் மகன் பிரவீன்குமார்(30). இவரது நண்பர் கோ.புதூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஜீவா(23). பிரவீன் குமார் வெளியூர் சென்று திரும்பியபோது வீட்டில் பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த அவருக்கு, வெளியூர் செல்லும் முன்பாக அவரது வீட்டிற்கு நண்பர் ஜீவா வந்து சென்றது நினைவுக்கு வந்தது. அப்போது அவரை வீட்டில் வைத்துவிட்டு, இவர் மட்டும் வெளியே சென்று வந்துள்ளார். இதனால் ஜீவா மீது சந்தேகம் அடைந்த பிரவீன்குமார், இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ஜீவாவை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

The post நகை திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Praveen Kumar ,Selvakumar ,Madurai TRO Colony ,Jeeva ,Senthilkumar ,Ko. Puthur Mariamman Temple ,Praveen… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை