×

கலெக்டரிடம் கோரிக்கை மனு

 

திண்டுக்கல், பிப்.18: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சியில் சட்ட விரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி, ஆதித்தமிழர் கட்சி சார்பில் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். ஆதித்தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்ட தலைவர் வினோத் தலைமையில், மாவட்ட செயலாளர் பழனி ராஜா முன்னிலையில், கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சி சிறுமலைபுதூர், பழையூர், தென்மலை, அகஸ்தியர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருபவர் மீது கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

The post கலெக்டரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Collector ,Saravanan ,Adithamizh Party ,Sirumalai Panchayat ,Dindigul district ,President ,Vinoth ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா