×

15 பேரை கடித்து குதறிய வெறிநாய்

 

அரூர், பிப்.17: அரூர் அடுத்த எஸ்பட்டி கிராமத்தில், தெருநாய் ஒன்று நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (60), பழனிசாமி (55), தீபா (46), உண்ணாமலை (42) இந்துமதி (35) உள்ளிட்ட 15 பேரை கடித்தது. இதில் 5 பேர் மட்டும் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சியவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இது குறித்து பொதுமக்கள் புகாரின் பேரில் தாசில்தார் பெருமாள், ஆர்ஜ சத்தியபிரியா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நாயை பிடிப்பதாக கூறினர். மேலும் வெறிநாய் என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், ஒன்றிய செயலாளர் பசுபதி ஆகியோர் நாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

The post 15 பேரை கடித்து குதறிய வெறிநாய் appeared first on Dinakaran.

Tags : ARUR ,ESPTI ,TERUNAI ,KALYANASUNDARAM ,PALANISAMI ,DEEPA ,UNNAMALAI ,HINDUMATI ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்